இது தொடர்பாக புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராக, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த காந்திராஜிக்கு ஒராண்டு பதவி நீட்டிப்பு கேட்டு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அக்கோப்பினை எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாமல் நிராகரித்துவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசின் கூடுதல் வழக்கறிஞர்களாகத் திறமையாகப் பணியாற்றிவரும்போதும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞரான மாலா என்பவரை புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளார். இந்த தன்னிச்சையான நியமனம் கண்டனத்திற்குரியது.
அது புதுச்சேரி வழக்கறிஞர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் உயர் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர், அரசு குற்றவியல் வழக்கறிஞரைப் புதுச்சேரியைச் சேர்ந்த அல்லது புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிரண்பேடி இரண்டு மடங்கு செலவு செய்துள்ளார்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்