ETV Bharat / bharat

தேசியப் புலனாய்வு முகமையை வலுப்படுத்த மத்திய அரசு திட்டம்?

டெல்லி: தேசியப் புலனாய்வு முகமையை வலுப்படுத்துவது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்வது தொடர்பாக இன்று கூடவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

nia
author img

By

Published : Jun 24, 2019, 7:34 AM IST

2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து தேசியப் புலனாய்வு முகமை உருவாக்கப்பட்டது. இந்நிலையில், பயங்கரவாதிகளைக் கூடுதல் வலுவுடன் எதிர்கொள்வதற்கு தேசியப் புலனாய்வு முகமைக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக, 2017ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பரீசிலித்துவருகிறது.

அதன்படி, உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்), தேசியப் புலனாய்வு முகமைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியர்களுக்கும், நாட்டிற்கும் எதிராக வெளிநாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை விசாரிக்கத் தேசியப் புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் அளிக்க இந்த சட்டத்திருத்தம் உதவும். இந்தச் சட்டத்திருத்த மசோதா தொடர்பான முடிவு, டெல்லியில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

Intro:Body:

NIA

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.