குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மக்கள் தொகையை பிரித்தாளுகின்றது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பகுதியினர் இந்தச் சட்டத்தை கடுமையாக ஆதரித்தாலும் மறுபக்கம் அதை கடுமையாக எதிர்த்து வாதிட்டும் வருகின்றனர். CAA என்பது மக்களிடையே ஒரு முகத்தோற்றம் போல் காட்சியளிக்கிறது. இந்த நிலை நீடித்தால் ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் தடைபடும்.
மேலும், அரசியல் கட்சிகள் அதை நன்கு அறிந்திருக்கின்றன. எனவே, நிலைமைக்கு ஏற்றார்போல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தனக்கான வாக்கு அரசியலாக மாற்ற சிலர் முயற்சித்து வருகின்றனர். இது தேர்தல் ஆதாயத்திற்காக மக்களைத் திசைதிருப்பும் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், "ஒருபுறம், (அசாதுதீன்) ஒவைசி மற்றும் (ஆம் ஆத்மி கட்சித் தலைவர்) அமனத்துல்லா கான் போன்றவர்கள் (முஹம்மது அலி) ஜின்னாவைப் போல நாட்டை பிளவுபடுத்த சதி செய்கிறார்கள். மறுபுறம், மம்தா பானர்ஜி சாதி மதத்தை வைத்து ஒரு அரசியல் செய்கிறார். உண்மையில், இந்தக் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான வாக்குகளை திருப்திப்படுத்துகின்றன " என்றார்.
அரசியல் வல்லுநர் ரத்தன்மணி கூறுகையில், "தேர்தலுக்கு சற்று முன்னர் எந்த மாநிலத்திலும் வன்முறை சம்பவங்கள் நடந்தால், அது நிச்சயமாக தேர்தல்களைப் பாதிக்கும்”
"மதத்தின் பெயரால் மக்களை திசைதிருப்ப காரணமாகின்றன. மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் பிரச்னையில் பொது கருத்து, ஆதரவு அல்லது எதிர்ப்பில் பிளவுபடுகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் மிக முக்கியமானவை. அதனைக் கணக்கில் கொண்டு மம்தா பானர்ஜி செயல்படுவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது" என்கிறார்.
ஆனால், டெல்லியில் காவல் துறை நிகழ்த்தும் வன்முறை சம்பவங்கள் பாஜகவின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளது. ஒருபோதும் ஒரு மதம் சார்ந்த நாடாக இந்தியாவைக் கருத முடியாது. இந்தியா சமத்துவம் நிறைந்த அனைத்து மக்களும் வாழத் தகுதியுள்ள நாடாக பார்க்கப்படுகிறது.
பாஜக ஒருபோதும் புரிந்துகொள்ள போவதில்லை மதத்தின் பெயரால், கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைக்கு பதில் சொல்லியே தீரவேண்டும். மக்களை நல்வழிப்படுத்துவதே ஒரு அரசின் தலையாய கடமை.
அறத்தின் வழியில் போராட்டம் செய்பவர்களை பொறுமை காக்கச் சொல்வதும், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டிக்காமல் இருப்பது பாஜக ஒருதலை சார்ந்தே செயல்படுகிறது" என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'இந்தியா சர்வாதிகார நாடு அல்ல' - திருநாவுக்கரசர் எம்.பி.