மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கோவா கத்தோலிக்க பேராயர் ஃபிலிப் நேரி ஃபெராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேராயர் ஃபிலிப் நேரி ஃபெராவ் தனது கருத்தில், “மத்திய அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக குடியுரிமை ரத்து செய்யவும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவும் ஆயத்தமாகிவிட்டது. இதனை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஒரு உண்மை உள்ளது. அது மத ரீதியாக மக்களை பிரிக்கிறது. நாட்டின் மதச்சார்ப்பின்மைக்கு எதிராகவும் உள்ளது. இது நம் நிலத்தின் ஆன்மா மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது. நம் நாடு பழங்காலத்திலிருந்து வந்தாரை வரவேற்கும் வீடாக உள்ளது.
இது உலகெங்கிலும் அனைவரும் ஒரு மிகப்பெரிய குடும்பம் என்ற தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை பாரபட்சத்துடன் கூடிய ஒன்றாக உள்ளன. இது நம்மை பிளவுப்படுத்தும். அதுமட்டுமின்றி நமது பண்பாடு கலாசாரத்தில் மோசமான தாக்குதலை ஏற்படுத்தி தீங்கினை விளைவிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஷூட்டர்' படத்தின் தடைக்குக் காரணம் என்ன தெரியுமா?