ETV Bharat / bharat

நிலத் தகராறு: தொழிலதிபர் கொலை! - மகாராஷ்டிரா தொழிலதிபர் கொலை கொலை

மும்பை: நிலத் தகராறில் தொழிலதிபர் கொலைசெய்த நபரைக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

Businessman killed  property dispute  murder case  கொலை  மகாராஷ்டிரா தொழிலதிபர் கொலை கொலை  நாக்பூர் தொழிலதிபர் கொலை
Businessman killed
author img

By

Published : Apr 22, 2020, 4:40 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிபாவ் சவார்க்கர். இவர் ஒரு தொழிலதிபர். இந்நிலையில், ஹரிபாவ் தனக்குச் சொந்தமான நிலம் ஒன்றை பண்டி ஷேக் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், பண்டி ஷேக் அந்த நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டடம் கட்டியுள்ளார்.

இது குறித்து சக்கர்தரா காவல் நிலையத்தில் ஹரிபாவ் புகார் அளித்தார். இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அந்தக் கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால், ஆத்திரமடைந்த பண்டி ஷேக் நேற்று மாலை ஹரிபாவ்வை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

அதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பண்டி ஷேக்கை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:கடன் பிரச்னை: அருப்புக்கோட்டையில் இளைஞர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.