2020 - 2021ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் புதிய தொழில் முயற்சி நிறுவனங்களை மேம்படுத்த அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளைக் காணலாம்.
- ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
- தொழில் முனைவோரே இந்தியாவின் பலம். வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களும் அவர்கள்தான். எனவே அவர்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க சிறப்பு பிரிவு அமைக்கப்படும்.
- பகுப்பாய்வு, இயந்திரம் மூலம் கற்றல், செயற்கை நுண்ணறிவு, உயிர் தகவலியல் போன்ற தொழில்நுட்பப் பரவல் உற்பத்தி வயதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகளவில் உயர்த்தத் திட்டம்.
- இரண்டு முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- கடந்த 5 ஆண்டுகளில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், நமது இளைஞர்களின் உற்சாகமும் ஆற்றலும் வளர்ச்சியைத் தூண்டியுள்ளன.
- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாகும். எனவே இத்துறையில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்படும்.
- நம் நாட்டு மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். நமது வர்த்தகங்கள் ஆரோக்கியமானதாகவும், அனைத்து சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் எஸ்.சி-எஸ்.டி பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையின் திறன் மேம்பட்டுள்ளது.
- அலுவலர்ளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.
- தொழில் துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் 27,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
- வறுமையை ஒழிக்க, சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
- கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும், பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.