2020 - 2021ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரை நிகழ்த்திவருகிறார். அதில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அவர் வெளிட்ட முக்கிய அறிவிப்புகளைக் காணலாம்.
- போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
- 5 ஆண்டுகளுக்கு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
- சென்னை- பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும்
- ரயில் பாதையை ஒட்டிய ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் சூரிய மின்னுற்பத்தி செய்யப்படும்
- 27,000 கி.மீ. தூர ரயில் பாதை மின்மயமாக்கப்படும். டெல்லி - மும்பை அதிவிரைவு சாலைப் பணியை 2023ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
- அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
- குடிநீர்ப் பற்றாக்குறைய போக்க 'ஜல் ஜீவன் திட்டம்' கொண்டுவரப்படும்.
- நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9000 கி.மீ.க்கு பொருளாதாரப் பாதை அமைக்கப்படும்