கர்நாடக மாநிலம் கும்தாவில் பேசிய பாஜக எம்பி., அனந்த குமார் ஹெக்டே, “பிஎஸ்என்எல் நிறுவனம் தேச விரோதிகளால் நிறைந்துள்ளது. இதை அரசு நிர்வகித்து வந்தாலும், எதிர்காலத்தில் இது தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இந்த நிறுவனத்தை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், இதன் ஊழியர்கள் தேசத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர்.
இவர்களுக்காக பணம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியிருந்தும், நிறுவனம் முழுவதும் சூழ்ந்துள்ள தேச விரோத ஊழியர்கள், பணி செய்ய மறுக்கின்றனர். முன்னதாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்த 85 ஆயிரம் ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதேபோல் பலரும் இன்னும் சில தினங்களில் அனுப்பப்படுவர். பிஎஸ்என்எல் நிறுவனமும், ஏர் இந்தியா நிறுவனமும் அரசிற்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என்று கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் கருத்துகள் பிஎஸ்என்எல், ஏர் இந்தியா ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.