காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர் ஒருவரின் சடலத்தை எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் வீரர்களிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த திங்கள்கிழமை சர்வதேச எல்லை அருகே சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் நபரின் சடலத்தை பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் எல்லை பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில், எல்லை பாதுகாப்பு படையில் 11 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 15 பேரும் பங்கேற்றனர். அப்போது, இந்திய வீரர்கள், இறந்தவரை உறுதிப்படுத்த அதற்கான ஆதாரங்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் கேட்டறிந்தனர்.
ஆதாரங்கள் கொடுத்ததையடுத்து, சகல மரியாதையுடன் பாகிஸ்தான் ஊடுருவல்காரரின் சடலம் ஒப்படைக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கிடைத்த தகவலின்படி, உயிரிழந்த ஊடுருவல்காரரின் பெயர் ரோஜ்தீனின் மகன் அப்துல் ஹமீத் ஆகும். இவர் பாகிஸ்தானில் ஷாகர்கரில் உள்ள சாமன் குர்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.