எல்லை பாதுகாப்பு படை பிரிவின் உளவுத்துறையிலிருந்து கிடைத்த ரகசிய தகவலின்படி, ரங்காட் எல்லை புறக்காவல் நிலையத்தின் காவலர்கள் பாக்தா பகுதியில் மறைந்திருந்தனர்.
அப்போது, நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் ரங்காட் கிராமத்தை நோக்கி செல்ல முயற்சித்தது தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய வழிகாட்டியின் பெயரை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கிராம தலைவருடன் சோதனை மேற்கொண்ட காவலர்கள் படை, வங்க தேசத்தின் குறிப்பிட்ட நபரை கைது செய்தனர்.
எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த மூவரில் இருவர் தம்பதியினர் எனத் தெரிவித்தனர். அவர்கள் உத்தரப் பிரதேசத்தில் பணி செய்ய வந்துள்ளார். மற்றொரு பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், நாடியாவில் வசிக்கும் தனது கணவரை காண வந்தேன் எனக் கூறியுள்ளார்.
தற்போது, வங்க தேசத்தை சேர்ந்த மூவரும், இந்திய வழிகாட்டியும் பாக்தா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.