ETV Bharat / bharat

கொரோனா அச்சம்: கேரளாவில் ’பிரேக் தி செயின்’ திட்டம்! - கொரோனா அப்டேட்ஸ்

திருவனந்தபுரம்: கொரோனா பரவுவதைத் தடுக்கும் நோக்கில், ’பிரேக் தி செயின்’ என்ற திட்டத்தினை கேரள சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேரளாவில் விழிப்புணர்வு முகாம்
கேரளாவில் விழிப்புணர்வு முகாம்
author img

By

Published : Mar 16, 2020, 10:42 AM IST

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்துவரும் வேளையில், கேரளாவில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், மக்களிடமிருக்கும் அச்சத்தை குறைக்கவும், மேற்கொண்டு கொரோனா பரவாமல் தடுக்கவும் பிரேக் தி செயின் என்ற சுகாதார திட்டத்தினை அம்மாநில சுகாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தொடங்கி வைத்தார். இந்த முகாமின் குறிக்கோள், சங்கிலி பின்னலைப் போல பரவும் கொரோனாவை ஒழிப்பதாகும். இதற்கு மக்களின் தனிப்பட்ட சுகாதாரம் மிகவும் முக்கியம். இதை வலியுறுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த முகாமின் முக்கிய நோக்கங்கள்:

  • வணிக வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவதையும், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
  • அழுக்கான கைகளால் அநாவசியமாக மூக்கு, கண் போன்ற உறுப்புகளைத் தொடக்கூடாது.
  • இருமல், தும்மல் வரும்போது கட்டாயம் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.
  • ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் என்பதால் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • நோய் தொற்று இருக்குமானால் கட்டாயம் முகவுறை அணிய வேண்டும்.
  • கைகளை சோப்பு போட்டு, நீரில் அடிக்கடி கழுவ வேண்டும்.
  • சோப்பு, தண்ணீர் கிடைக்காதபோது சானிடைசர் (கிருமிநாசினி) பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விழிப்புணர்வு பரப்புரையில் அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற அலுவலகங்கள், வங்கி உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் நிறுவனங்கள் நேரடியாக பங்குபெறுகின்றன. இதன் மூலம் பெரும்பான்மையான மக்களிடமிருந்து கொரோனா அச்சத்தையும், அதன் நோய்தொற்றையும் தவிர்க்க முடியும் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா குறித்து தவறான தகவல் பரப்பிய ஆசிரியர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.