கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வர்கிஸ். இவருக்கு குருமாள் குன்னு பகுதியில் சொந்தமாக பலாப்பழம் தோட்டம் உள்ளது. விவசாயத்தில் பல்வேறு புதிய முயற்சிகளால், மிகவும் பிரபலமானவர்.
'ஆயுர்ஜாக்' எனப்படும் பலாப்பழ வகையை விற்பனை செய்து மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றார். இதற்காக, இவர் கேரள அரசாங்கத்தின் "க்ஷோனா மித்ரா விருது" ( Kshona mithra award) உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.
இந்நிலையில், பிரேசிலிய தூதரகம் டெல்லியில் நடைபெறும் பிரேசிலிய குடியரசு தின விருந்துக்கு உணவுகளை தயாரிக்க 64 கிலோ கிராம் 'ஆயுர்ஜாக்' ('Ayurjack') பலாப் பழத்தை இவரிடம் கேட்டுள்ளது. இவருடைய சாகுபடி பாணியும் ஐக்கிய நாடுகளின் வாஃபா விருது பட்டியலில் இடம்பெற்றது.
இதையும் படிங்க: ’பொதுமக்களின் கருத்தை கேட்ட பின் தேசிய குடிமக்கள் திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்’ - இரோம் ஷர்மிளா