கோவா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய கோவா மாநில பாஜக தலைவர் சதானந்த் தனாவடே கூறியதாவது:
கரோனாவுக்கு எதிராகப் பிரதமர் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை மட்டும் அதிகமாக வாங்குங்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். அதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
கரோனாவின் நெருக்கடி சூழல், சீனா போன்ற கிழக்கு அண்டை நாடுகள் மீது சிறு குழந்தைங்களுக்குக்கூட கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். ஒரு குழந்தையின் தந்தை என்னிடம், தன்னுடைய மகனை சீன பொருள்களை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகக் கூறினார்.
கோவாவில் சீன தயாரிப்புகளைத் தடைசெய்ய வேண்டும். வெளிநாட்டுப் பொருள்களை நம்பியிருக்கக் கூடாது. இதை ஒரேநாளில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த முயற்சி வெற்றியடைய நீண்ட நாள் ஆகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் உயிருடன் எரித்துக்கொலை