ETV Bharat / bharat

இந்திய, சீன எல்லை விவகாரம் குறித்து இன்று ஆலோசனை - ஒருங்கிணைக்கும் குழு இன்று கூட்டம்

டெல்லி: இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில், இந்திய, சீன எல்லை விவகாரத்துக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைக்கும் குழுவின் கூட்டம் இன்று (ஆக.20) நடைபெற உள்ளது.

இந்திய, சீன எல்லை விவகாரம்
இந்திய, சீன எல்லை விவகாரம்
author img

By

Published : Aug 20, 2020, 5:47 PM IST

கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில், இந்திய, சீன எல்லை விவகாரத்துக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைக்கும் குழுவின் கூட்டம் இன்று (ஆக.20) நடைபெற உள்ளது. இரு நாடுகளின் சார்பில், இணை செயலாளர்களுக்கு நிகரான உயர்மட்ட தலைவர்கள் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில், ராணுவ ரீதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ராணுவப் படைகளை முன்பிருந்தது போல் நிலைநிறுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இதையடுத்து, பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது.

இன்று நடைபெற உள்ள கூட்டத்தில், ராணுவ திரும்பப் பெறும் நடவடிக்கையை முழுவதுமாக நிறைவேற்றி, முன்பிருந்ததுபோல் படைகளை நிலைநாட்ட இந்தியா கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ, ராஜாங்க ரீதியான பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும் பிங்கர், டெப்சாங் சமவெளி, கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் சீனா தனது படைகளைத் திரும்பப் பெறவில்லை.

இந்திய, சீன எல்லை விவகாரத்துக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைக்கும் குழுவின் 17ஆவது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், எல்லைப் பகுதிகளில் படைகளைத் திரும்பப் பெற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இரு நாட்டு உறவை மேம்படுத்த அமைதியை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும் என இந்திய, சீன நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பின்பற்ற வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நான்காவது முறையாக தூய்மையான நகர் விருதை தட்டிச்செல்லும் இந்தூர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.