கடந்த இரண்டு தினங்களுக்கு முன் (ஜன. 20) கர்நாடகா மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில், பை ஒன்று இருப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் பையை சோதனை செய்தபோது, அதில் வெடிகுண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கு வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பையிலிருந்து வெடிகுண்டை செயலிழக்க முயன்றனர்.
ஆனால், வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் அந்த வெடிகுண்டை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து வெடிக்கச் செய்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், ஆதித்யா ராவ் என்பவர் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டு பெங்களூரு காவல் துறையிடம் சரணடைந்துள்ளார்.
ஆதித்யா ராவ் சரணடைந்த பின்னர், மங்களூரு காவல் துறையினர் பெங்களூரு நோக்கி விரைந்துசென்று இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் வெடிகுண்டு - வெடிக்க வைத்த அலுவலர்கள்