மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. அம்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளதால், அங்கு காலியான இடங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, காலியாக உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பரப்புரையில் அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தேர்தல் பரப்புரைக்குப் பின் பேசிய அவர், "தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்" என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரின் சைத்து, சிங்காத், லிலாங், வாங்ஜுங், வாங்கோய் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிகார் தேர்தல்: என்.டி.ஏ கூட்டணியில் கொள்கை குழப்பம் - மக்கள் முடிவு என்ன?