மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மீது பொய் வழக்குப்பதிவு செய்து அவரை சர்வாதிகாரமாக கைது செய்ததாகக் கூறி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை அஞ்சலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், அமைச்சர் கந்தசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "அதிகார துஷ்பிரயோக செயலை மத்திய பாஜக அரசு செய்துவருகின்றது. மேலும் இலவச அரிசி திட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது பாஜக நியமன எம்எல்ஏக்கள் எதுவும் கூறாமல் தற்போது ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநரை சந்தித்தபின் அரிசி கொள்முதலில் சிபிஐ விசாரணை தேவை என்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு தலைவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.