கடந்த 2019ஆம் ஆண்டு, பாலக்கோட் தாக்குதலின்போது இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் அவரை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது.
அவரை விடுவிக்காவிட்டால் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்திலேயே அபிநந்தனை விடுவித்ததாக பாகிஸ்தான் எம்பி தேசிய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ பதிவை வெளியிட்ட பாஜக தேசிய தலைவர் நட்டா, ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ராணுவம், அரசு, மக்கள் என யாரையும் காங்கிரஸ் இளவரசர் நம்பியது இல்லை.
மிகவும் நம்பிக்கைக்குரிய பாகிஸ்தான் நாடே தற்போது உண்மையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பரம்பரையும் பாதுகாப்பு படைகளை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.