ETV Bharat / bharat

ரிசார்ட் அரசியல் குறித்து காங்கிரசை சாடும் பாஜக...!

author img

By

Published : Jun 9, 2020, 4:18 PM IST

ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 குஜாரத் சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜஸ்தானில் உள்ள சொகுசு விடுதிக்கு கொண்டு சென்ற விவகாரத்தில் அக்கட்சியை பாஜக கடுமையாகச் சாடியுள்ளது.

Resort
Resort

குஜராத் மாநிலத்தில், நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு அதிரடி அரசியல் நகர்வுகள் நடைபெற்று வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதைத் தடுக்கும் விதமாக, பாஜக சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அம்மாநிலத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூன்று பேர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளனர். மேலும் சிலரும் ராஜினாமா செய்யப்போவதாக வதந்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் அக்கட்சியின் எண்ணிக்கை பலம் குறைக்கப்பட்டு, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பாஜக மட்டுமே வெற்றி பெற வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேரை காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர் நாராயண் ப்ரோஹித் கூறுகையில், 'ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துவருகிறது. இந்த சூழலில் கரோனா நோய் பாதிப்பு அதிகமாக உள்ள மற்றொரு மாநிலமான குஜராத்திலிருந்து, சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டுவந்ததது விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே, இது தொடர்பாக புகார் பதிவு செய்து, அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தவுள்ளேன்' என்றார்.

இதையும் படிங்க: கை சின்னத்தை விமர்சிப்பதை விடுத்து எல்லையை கவனியுங்கள் - ராகுல் காந்தி மறைமுகத் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.