டெல்லியில் அடுத்து ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பாஜகவின் தேர்தல் பரப்புரை தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், பாஜக அதன் பரப்புரையின் அடுத்தகட்டமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஆயிரத்து 731 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விளப்பரப் பதாகைகளை நிறுவியுள்ளது. அதில், "அங்கீகரிக்கப்படாதவை" என்ற இழி சொல் நீக்கப்பட்டதாகவும், இனி அங்கு வாழும் மக்கள் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பில் வசிக்கிறோம் என்ற பெருமையுடன் வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் அங்கு வாழும் மக்களை பாஜக வசம் ஈர்ப்பதே அக்கட்சியின் வியூகமாகவுள்ளது.
இதையும் படிங்க : உன்னாவ் விவகாரம்: நீதி கிடைத்தது எப்படி?