புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத காங்கிரஸ் அரசைக் கண்டித்து தொடர்ந்து 72 மணி நேரம் தொடர் போராட்டத்தை யூனியன் பிரதேச பாஜக தொடங்கியுள்ளது.
பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் அண்ணா சிலை அருகே கொட்டும் மழையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
![BJP protests against Puducherry Congress government](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-04-bjp-dharna-tn10044_04122020173138_0412f_1607083298_964.jpg)
கூட்டத்தில் பேசிய அவர், “குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகள் அளித்துஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு நான்கரை ஆண்டுகளில் ஒருவருக்கு கூட அரசு வேலை வழங்கவில்லை”என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : கடற்படை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி!