ETV Bharat / bharat

பாஜக அநாகரிக அரசியலில் ஈடுபடுகிறது - ஆம் ஆத்மி - ஆம் ஆத்மி கட்சி

டெல்லி: கரோனா வைரஸ் சூழலிலும் பாஜக அநாகரிக அரசியலில் ஈடுபடுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.

BJP playing dirty politics over COVID-19 figures: AAP

author img

By

Published : May 25, 2020, 10:18 AM IST

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களில் முறைகேடு செய்துவருவதாக பாஜகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா, மக்கள் அனைவரும் பெருந்தொற்றினால் தவித்துவரும் இந்த வேளையில், பாஜக மக்களின் மனநிலையை கெடுக்கும்விதமாக அநாகரிக அரசியலில் ஈடுபட்டுவருகிறது. டெல்லி உயர் நீதிமன்றம் பாஜகவின் மனுவினை ஏற்க மறுத்துள்ளதை வரவேற்கிறேன். டெல்லி அரசு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சரியான தகவல்களை அறிவித்துவருகிறது. மக்களை பதற்றமாக்கவே, எதிர்க்கட்சி தலைவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்றார்.

ஆம் ஆத்மியின் செய்தித்தொடர்பாளர் ராகவ் சந்தா கூறும்போது, பெருந்தொற்றினால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும்போது, மக்களுக்காக செயல்பட்டுவரும் அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாஜகவினர், டெல்லி அரசிடமும், டெல்லி மக்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும். டெல்லி உயர் நீதிமன்றம் பாஜகவினரின் பொய்யான மனுவினை ஏற்க மறுத்துள்ளதை நான் மனமுவந்து வரவேற்கிறேன். நீதிமன்றத்தின் இந்த செயல் மக்கள் மத்தியில் பொய் பரப்புரைகளை தடுக்கும் என எண்ணுகிறேன் என்றார்.

இதையும் படிங்க: வெளி மாநில தொழிலாளர்கள் மீது அக்கறை காட்டும் டெல்லி அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.