ETV Bharat / bharat

டெல்லி மாசுக்குக் காரணம் அரவிந்த் கெஜ்ரிவால்தான் - பாஜக எம்பிகள் தாக்கு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே டெல்லி முதலமைச்சர்தான் என்று பாஜகவின் டெல்லி மக்களவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Arvind Kejriwal
author img

By

Published : Nov 20, 2019, 1:27 PM IST

காற்று மாசும் பருவநிலை மாற்றமும் குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக எம்பிகள், டெல்லிக் காற்று மாசுக்கு முக்கிய காரணம் அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்று சாடியுள்ளனர்.

அப்போது மேற்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வேர்மா, "வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை மற்றும் தூசிகளைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி முதலமைச்சர் விவசாயக் கழிவுகளை எரிப்பதுதான் இதற்குக் காரணம் என்று கூறுவது பொறுப்பற்ற செயல். விளம்பரங்களுக்காக 600 கோடி ரூபாய் செலவழிக்கும் டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த மிகக் குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்குகிறது.

காற்று மாசுக்குக் காரணம் விவசாயிகள்தான் என்று குற்றம்சாட்டுவதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் கிராம மக்களுக்கும் நகரவாசிகளுக்குமிடையே உள்ள பிளவை பெரிதுபடுத்துகிறார். மேலும், 'ஆட் ஈவன்' திட்டத்தை விளம்பரப்படுத்த ரூ. 70 கோடி செலவழித்த டெல்லி அரசு பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

போதிய பொதுப் போக்குவரத்து இல்லாததாலேயே மக்கள் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் காற்று மாசு மிகவும் அதிகரிக்கிறது. யமுனை ஆற்றில் வெளியேற்றப்படும் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு முறையான கொள்கைகூட டெல்லி அரசிடம் இல்லை” என்றார்.

பாஜகவின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி கூறுகையில், "டெல்லி அரசு அனைத்துக்கும் காரணம் மத்திய அரசுதான் என்று கூறி தன் பொறுப்பிலிருந்து தட்டிக்கழித்துக் கொள்கிறது. நீர் தெளிப்பான்களை வாங்கக்கூட மத்திய அரசுதான் நிதி அளித்து" என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வானிலை காரணமாக மேலும் மோசமடையும் டெல்லி காற்று மாசு!

Intro:Body:

BJP MPs Attack Arvind Kejriwal In Parliament Over Delhi Pollution

https://www.ndtv.com/india-news/delhi-pollution-bjp-mps-blame-arvind-kejriwal-for-not-taking-steps-to-curb-pollution-2135300

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.