பாஜக சார்பாக செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது மருத்துவரும், சமூக ஆர்வலருமான
சக்தி பார்கவா என்பவர் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான ஜி.வி.எல். நரசிம்ம ராவ் மீது காலணி வீசியுள்ளார். பிறகு, காவல் துறையினர் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மூத்தத் தலைவர் பூபேந்திர யாதவ், ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சி கடுமையை விமா்சித்துள்ளனர்.
மருத்துவரான சக்தி பார்கவா உத்தரப்பிதேச மாநிலம் கான்பூரில் உள்ள சக்தி பார்கவா மருத்துவமனையின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.