மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத். இவர் தனது வீட்டிற்கு அருகில் பிண்டால் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, “நேற்றிரவு சில நபர்கள் வீட்டிற்கு வந்து எம்எல்ஏவை அழைத்துச் சென்றனர்” என்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். பின்னர் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் ஏன் இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லத அவரை யாரேனும் கொன்று தூக்கில் தொங்கவிட்டனரா? என்பன போன்ற பல்வேறு கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டில் ஒன்பது லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!