உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் பாஜக தலைவர் அனுராக் சர்மா. இவர் புதன்கிழமை இரவு, ஜீவாலா நகரில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே சர்மா உயிரிழந்தார்.
சர்மாவுக்கு குற்றவியல் பின்னணி இருந்ததாகவும், அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது மனைவி ஷாலினி சர்மா ராம்பூரில் பாஜக கவுன்சிலராக உள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறை தலைர் ரமித் சர்மா தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் பேசிய ரமித் சர்மா கூறுகையில், " கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மூன்று குழுக்கள் அமைப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கைது!