ஹரியானா சட்டப்பேரவையில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 68 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இதனையடுத்து இன்று காலை எட்டு மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஹரியானாவில் பாஜக 40, காங்கிரஸ் 31, ஜனநாயக் ஜனதா 10, சுயேச்சை உள்பட மற்றவை ஒன்பது தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். ஹரியானாவில் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவைப்படுவதால், ஆட்சி அமைப்பதில் இழுபறியில் உள்ளது.
இந்நிலையில், ஹரியானாவில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க உரிமை கோர ஹரியானா மாநில பாஜக தலமைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.