வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அரசியல் குழப்பம் உச்சம் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மணிப்பூர் காங்கிரஸ் கண்காணிப்பாளருமான அஜய் மக்கான் கூறியதாவது:-
மணிப்பூரில் 11ஆவது சட்டப்பேரவை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பாஜக விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. சட்டவிதிகள் மீறப்பட்டு மோசமான முயற்சிகள் அறங்கேறி வருகின்றன.
அரசியல் விளையாட்டில் ஒவ்வொரு முறையும் நெறிமுறையற்ற தந்திரங்களை பயன்படுத்தப்படுகின்றன. மணிப்பூரில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகின்றனர்.
தங்களது ஒவ்வொரு செயல்முறையிலும் அவர்கள் ஜனநாயகத்தை படுகொலை செய்கின்றனர். பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி தொடர சபாநாயகரும் உதவுகிறார்.
இவ்வாறு அஜய் மக்கான் கூறியுள்ளார்.
60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது.
இதற்கிடையில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தற்போது பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்த மாநிலக் கட்சி ஒன்று தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரிலிருந்து 1.63 லட்சம் பேர் வெளியேற்றம்!