ETV Bharat / bharat

ஒடிசா அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் பாஜக - பாஜக மகளிர் அணியினர்

ஐந்து வயது சிறுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை ஒடிசா அமைச்சர் அருண்குமார் சாஹு காப்பாற்றியதாக குற்றஞ்சாட்டிய பாஜக மகளிர் அணியினர் அவரை ராஜநாமா செய்யுமாறு வலியுறுத்தினர்.

BJP demands Odisha Minister's resignation over minor's murder

author img

By

Published : Dec 4, 2020, 4:33 PM IST

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியைக் கொலைசெய்த வழக்கில் பிரதான குற்றவாளியைக் காப்பாற்றியதாக பிஜு ஜனதா தள கட்சியின் அமைச்சர் அருண்குமார் சாஹு மீது பாஜக மகளிர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவரை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட பாஜக மகளிர் அணியினர், சிபிஐ விசாரணை குறித்து பிஜு ஜனதா தள அரசு ஏன் அச்சம் கொள்கிறது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை ஓய்வதாக இல்லை எனவும் தெரிவித்தனர்.

ஒடிசா அரசாங்கம், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதே சமயத்தில், ஒடிசா காங்கிரஸ் பொறுப்பாளர் செல்ல குமார், குற்றங்களை நிரூபிக்க ஒடிசா உயர் நீதிமன்றம் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு சிபிஐ விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை. எனவே நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும் என்றார்.

முன்னதாக ஒடிசா அரசு ஐந்து வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவினை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 14ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி காணாமல்போனார். பின்னர் சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு ஜூலை 23ஆம் தேதி அந்தக் குழந்தையின் சடலம் அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் சாக்கில் கட்டிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கடந்த 24ஆம் தேதி சிறுமியின் மரணத்திற்கு நீதிவேண்டி, தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட பாபுலி நாயக் என்பவருக்கு, அமைச்சர் அருண்குமார் சாஹு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து அது தற்போது பூதாகரமாகியுள்ளது.

இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவில் இப்படி நடக்குமா? உ.பி. காவல் துறை அராஜக போக்கால் கலங்கும் மணவீட்டார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.