மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் நாடு முழுவதும் இன்று (டிச.8) பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் அமைதியாக நடைபெற்ற பந்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் கட்சியுடன் இணைந்து பந்தில் பங்கேற்றனர்.
பாஜகவை தவிர அனைத்துக் கட்சி ஆர்வலர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் என தானாக முன்வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், பாஜகவினருக்கும், மற்ற கட்சியினருக்கும் இடையே குழப்பமான சூழல் நிலவிய பகுதிகளில் போலீசார் அமைதியை நிலைநாட்டினார்.