ETV Bharat / bharat

'பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் மூலம் எம்எல்ஏக்களை வாங்கும் பாஜக'

author img

By

Published : Jun 26, 2020, 1:04 PM IST

போபால்: பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றி அதில் வரும் லாபத்தின் மூலம், பாஜக எம்எல்ஏக்களை வாங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் விமர்சித்துள்ளார்.

bjp-buying-mlas-using-profit-from-fuel-price-hike-digvijaya-singh

போபால்: பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றி அதில் வரும் லாபத்தின் மூலம், எம்எல்ஏக்களை பாஜக வாங்கிவருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான திக்விஜய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, கடந்த இருபது நாள்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கலால் வரியினைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெட்ரோல் டீசல் விலையில் மாறுதல் உள்ளன.

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயைக் கடந்துள்ளது. அதாவது, டீசல் விலை லிட்டருக்கு 80.19 காசாகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 80.13 காசாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது எண்ணெய் நிறுவனங்கள் வைத்துள்ள, பாஜக ஆதரவு நிறுவனங்களுக்கு பெரும் லாபத்தை அளித்துவருகிறது. இதன் காரணமாக பெரும் பணக்காரர்கள் அதிகளவு லாபம் அடைகின்றனர். அதேவேளையில், ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் கைகளில் உள்ள அனைத்துப் பொருளாதாரங்களையும் இழந்துவருகின்றனர்.

இந்தப் பெரும் பணக்காரர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு பாஜக தற்போது எம்எல்ஏக்களை வாங்கிக் கொண்டிருக்கிறது" என விமர்சித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.