ஒடிசா முதலைமச்சர் நவீன் பட்நாயக், பெண்கள் மேம்பாட்டிற்காக மம்தா, சக்தி என்ற இரு புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார். பெண்களுக்கு சமூக பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கும் நோக்கில் சக்தி என்ற திட்டமும், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விதத்தில் மம்தா என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், நடப்பு மக்களவைக் கூட்டத்தில் பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த பிஜூ ஜனதாளம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனத் தெரித்தார்.
பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ள பிஜூ ஜனதாதளம் கடந்த மக்களவைத் தேர்தலில் 33 விழுகாடு இடங்களை பெண் வேட்பாளரை முன் நிறுத்தியதாகத் தெரிவித்தார். நாட்டிலேயே முதல்முறையாக உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33 விழுகாடு பிரதிநிதித்துவத்தை தனது தந்தை பிஜூ பட்நாயக் செய்ததை சுட்டிக்காட்டிய நவீன், தற்போது அதை 50 விழுக்காடாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒடிசா மாநில முதலமைச்சராக சுமார் 20 ஆண்டுகளாக பதவிவகித்து வரும் நவீன் பட்நாயக், மக்களவையில் 20 உறுப்பினர்களைக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்