ETV Bharat / bharat

"எனது தாய் சன்னி லியோன், தந்தை இம்ரான் ஹாஷ்மி" - நகைப்பை ஏற்படுத்திய பிகார் மாணவர் - பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைகழகம்

பிகாரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சன்னி லியோன்-இம்ரான் ஹாஷ்மி தான் தனது பெற்றோர் எனத் தேர்வுக்கான நுழைவு அட்டையில் எழுதிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாணவன்
பிகார் மாணவன்
author img

By

Published : Dec 10, 2020, 9:33 PM IST

பாட்னா (பிகார்): பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் குண்டன் குமார் (20), இவர் தேர்வுக்கான நுழைவு அட்டையில், பாலிவுட் பிரபலங்கள் சன்னி லியோன்-இம்ரான் ஹாஷ்மி தான் தனது பெற்றோர் என எழுதியிருந்த சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது நுழைவு அட்டையின் புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்த விசாரணையின்போது, அந்நபர் அம்மாவட்ட மினாப்பூரில் உள்ள தன்ராஜ் மக்தோ கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் என்று தெரியவந்தது. பாலிவுட் பிரபலங்களின் பெயர்கள் மட்டுமல்லாது தனது இல்லத்தின் முகவரியாக பிகார் மாநிலத்தில் உள்ள பாலியல் தொழில் நடைபெறும் இடத்தின் முகவரியையும் அந்த மாணவன் எழுதியிருந்திருக்கிறார்.

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய பீம் ராவ் அம்பேத்கர் பிகார் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் கூறுகையில், " மாணவனின் நுழைவு அட்டையில் பெற்றோரின் பெயர்கள் இடம்பெறவேண்டிய இடத்தில் பாலிவுட் பிரபலங்கள் சன்னிலியோன், இம்ரான் ஹாஷ்மி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். நுழைவு அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண், ஆதார் எண் மூலமாக சம்பந்தப்பட்ட மாணவனை கண்டுபிடித்தோம். இந்த தவறுக்கு அந்த மாணவரே முழு பொறுப்பு. விசாரணை அறிக்கை வந்தவுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: பிகார் வெளிமாநில தொழிலாளியின் மகன் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.