கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய்-கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1924 டிசம்பர் 25ஆம் தேதி மத்தியப் பிரதேசம் குவாலியரில் பிறந்த இவர் இந்திய பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவரின் 95ஆவது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சிறந்த பேச்சாற்றலை உடைய வாஜ்பாய் அவசரநிலை பிரகடனத்தின்போது சிறைவாசம் அனுபவித்தார்.
அதன்மூலம் பல தலைவர்கள் அவருக்கு நண்பர்களாகினர். தனது தந்தை நாராயண் கிருஷ்ணா சேஜ்வாக்கர், வாஜ்பாய் ஆகியோருக்கு இடையேயான நட்பை அவரது மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான விவேக் கிருஷ்ணா சேஜ்வாக்கர் நினைவுகூர்ந்துள்ளார்.
இதுகுறித்து விவேக் கிருஷ்ணா சேஜ்வாக்கர், "அவசரநிலை பிரகடனத்தின்போது, இருவரும் கைது செய்யப்பட்டு ஒரே சிறையில் அடைக்கப்பட்டனர். வாஜ்பாய் ஆட்டோகிராஃப் போட்ட கடிதம் என்னிடம் உள்ளது. அதனை எப்போதும் வைத்திருப்பேன். என் மகன் பிறந்தபோது அவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்" என்றார்.
இந்திய வரலாற்றில் எதிரிகள் இல்லாத தலைவராகத் திகழ்ந்தவர் வாஜ்பாய் என குவாலியர் மக்கள் அவரை நினைவுகூர்ந்து உள்ளனர்.
இதையும் படிங்க: 'வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டும்' - குடியரசுத் துணைத் தலைவர்