கரோனா வைரஸ் நோயால் உலக நாடுகள் ஆட்டம் கண்டுள்ளன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்த கடிதத்தில், "தேசிய அளவிலான ஊரடங்கு, நோய் கண்டறியும் மையங்களை அதிகரித்தல், தனிமைப்படுத்துதல், சுகாதாரத்திற்காக மேற்கொள்ளப்படும் செலவுகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவில் நோய் பரவலைக் கட்டுப்படுத்திய உங்கள் அரசையும் அதை தலைமை தாங்கி நடத்திய உங்களையும் பாராட்டுகிறேன்.
கரோனா நோயாளிகளை கண்காணித்து மருத்துவ சேவைகளை மக்களிடையே கொண்டு சேர்த்ததற்கும் ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தி டிஜிட்டல் தளத்தை சரியான முறையில் பயன்படுத்தியதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்துடன் துணை நிற்போம் - பிரதமர் மோடி