மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் முடிவிகள் வெளியான பின் தொங்கு மக்களவை அமையும் பட்சத்தில், தங்கள் கூட்டணியில் பல கட்சிகளை இணைப்பதற்காக காங்கிரஸ், பாஜக கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில், பிஜு ஜனதா தளம் எந்த கூட்டணியை ஆதரிக்கும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. இந்த சூழலில் அக்கட்சியின் மூத்த தலைவர் அமர் பட்நாயக் இன்று செய்தியாளர்களை சந்தித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், "மத்தியில் ஆட்சி அமைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். ஆனால், ஒடிசா மாநிலத்தில் பல காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு கொண்டுவரும் கட்சிக்கு தங்களிள் ஆதரவு இருக்கும்" என்றார். அவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.