பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில், பார்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவருக்கு மனைவியும் மூன்று வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில், இந்தியா - சீனா இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நடைபெற்ற மோதலில், தனது மகன் சுனில் குமார் கொல்லப்பட்டதாக வந்தத் தகவலைக் கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்த தங்கள் மகனை எண்ணி பெருமிதம் கொண்டனர்.
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ, கால்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தௌலத் பேக் ஓல்டி ஆகிய இடங்களில் இந்திய - சீனப் படைகள் இடையே மோதல் வெடித்தது. கணிசமான எண்ணிக்கையிலான சீன ராணுவ வீரர்கள் பங்கோங் த்சோ உள்பட பல பகுதிகளில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியை கடந்து சட்டவிரோதமாக இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு, சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ மோதல்களில் ஒன்றாகும். இதன் காரணமாக எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.
இதையும் படிங்க : "ஒருவருக்கு, ஐந்து பேர்": கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தை திணறடித்த சீனா!