ETV Bharat / bharat

'பிகார் வெற்றிக்கும் கரோனாவை மோடி அரசு கையாண்டதற்கும் சம்பந்தமில்லை'

டெல்லி: பிகார் தேர்தலில் வெற்றிபெற்றதால் மோடி தலைமையிலான பாஜக அரசு கரோனா பெருந்தொற்றையும் பொருளாதாரத்தையும் திறம்பட கையாண்டது என்று அர்த்தமில்லை என சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

Yechury
Yechury
author img

By

Published : Nov 12, 2020, 10:00 PM IST

சமீபத்தில் பிகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. மகா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகளில் 16 தொகுதிகளில் வெற்றிபெற்றன. இந்நிலையில், பாஜகவின் வெற்றி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ட்விட்டரில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவில், “பிகாரில் பாஜக வெற்றிபெற்றதற்கும் மோடி அரசு கரோனாவையும் பொருளாதாரத்தையும் கையாண்டதற்கும் சம்பந்தமில்லை. அந்த ஒரு மாநிலத்தில் வெற்றிபெற்றதால் மட்டுமே மோடி அரசு திறம்பட செயல்படுகிறது என்பது அர்த்தமில்லை.

உண்மையில் பாஜக கூட்டணிக்கும் மகா கூட்டணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.03 விழுக்காடு மட்டுமே. அதாவது 3,12 கோடி வாக்குகளில் மகா கூட்டணியை விட 12 ஆயிரத்து 768 வாக்குகள் மட்டுமே பாஜக கூட்டணி அதிகமாக பெற்றுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் மோடி சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது போன்றே பேசினார். ஆனால் பெருந்தொற்றைக் கையாளுவது குறித்தோ பொருளாதாரம் குறித்தோ அவர் எதுவும் பேசவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'ஆசியான் நாடுகளுக்கு தான் முதல் முக்கியத்துவம் ' - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.