பிகாரில் ரோதஸ் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கிரிஹிரி சீயோசாகர் டூ பிளாக் பகுதியில் தவறான பாதையில் வந்த டிரக் எதிரே வந்துகொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம்செய்த ஒரு தம்பதி உள்பட ஐந்து பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பன்னிரெண்டு நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இறந்துபோன தம்பதி பெயர்கள் முக்தா கான்-ரேஷ்மா காடூன் எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்தில் சிக்கிய மற்றவர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: தடம் புரண்ட ஆஸ்திரேலிய ரயில் - இருவர் உயிரிழப்பு!