இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, எழுத்துப்பூர்வமான தேர்வுகளை நடத்துவது அவசியம். 2021ஆம் ஆண்டுக்கான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பொதுத்தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த எந்தத் திட்டமும் இல்லை.
அந்தத் தேர்வுகள் எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும். தேர்வுகளுக்கு முன்னதாக, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் மூன்று கட்ட ஆலோசனை நடத்தப்படும். குறிப்பாக கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தேர்வுகளின்போது பின்பற்றப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிபிஎஸ்சி மாணவர்கள் பொதுத்தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்