புவனேஷ்வரில் பணிபுரியும் காவல் துறையினர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், குடும்பம், நண்பர்களைப் பிரிந்துவந்து, ஒரு நாளைக்கு 18 மணி நேரம்வரை பணிபுரிந்துவருகின்றனர்.
அந்த வகையில் ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து தனது இரண்டு வயது குழந்தையைப் பிரிந்து, புவனேஷ்வரின் மகளிர் காவல் நிலைய பொறுப்புக் காவல் அலுவலரான பனிடா மொஹரனா கரோனா தடுப்புப் பணி மேற்கொண்டுவருகிறார்.
புவனேஷ்வரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நயாகரில் வசிக்கும் தனது குழந்தை, குடும்பத்தினருடன் காணொலி அழைப்பில் தினமும் பேசும் பனிடா தங்களுக்கு எல்லாவித பாதுகாப்பு வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன என்றும், இதுபோன்ற அவசர காலத்தில் நாட்டிற்காகப் பணிபுரிவதற்கு தான் பெருமைகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
”மக்களை வீட்டிலிருக்க நிர்பந்திக்க வேண்டியது தங்களது கடமை, கரோனா குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்வைப் பொருட்படுத்தாமல் வேலைசெய்கிறோம். மக்கள் வீட்டிலேயே தங்கியிருந்தால், கரோனா குறித்த இந்தப் போரில் வெற்றிபெற்று எங்கள் குடும்பங்களை நாங்கள் சந்தித்து மகிழ்வோம்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட கணவர், குழந்தையை வீட்டில் பூட்டிச்சென்று மருத்துவப் பணியாற்றும் தாய்