ETV Bharat / bharat

6-12 மாதங்கள் வரை பயனளிக்கும் கோவாக்சின் - பாரத் பயோடெக் தகவல்

கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் செலுத்தப்பட்டவரின் உடலில் தடுப்பாற்றல் ஆறு முதல் 12 மாதங்கள் வரை இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அதன் ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.

Bharat Biotech's Covaxin shows encouraging results in clinical trials: Research paper

author img

By

Published : Dec 24, 2020, 1:44 PM IST

ஹைதராபாத்: அதிகளவு உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திவரும் கரோனா வைரசினைக் கட்டுப்படுத்தவும், மேலும் மக்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கவும் உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முனைப்பு காட்டிவருகின்றன.

அந்த வகையில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற கரோனா தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்தின் இரண்டு கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், அந்தச் சோதனைகளின் முடிவினை ஆய்வுக் கட்டுரையாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், முதல்கட்ட சோதனையில் கோவாக்சின் செலுத்தப்பட்ட நபரின் உடலில் நீண்ட காலத்திற்குத் தடுப்பாற்றல் செயல்படுகிறது. ஆன்டிபாடிகளும், டி-செல்களும் மூன்று மாதங்கள் வரை நீடித்துள்ளன.

குழந்தைகள், இளைஞர்கள் என இரண்டாம் கட்ட சோதனை மேற்கொண்ட நபர்களுக்கு நான்கு வார கால அளவில், தடுப்பாற்றல் தூண்டப்படுவதும், தடுப்பூசி பாதுகாப்பாகச் செயல்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொண்டுவருகிறது.

மெருகேற்றப்பட்ட இந்தச் சோதனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவரின் உடலில் தடுப்பாற்றல் சுமார் ஆறு முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. இந்தச் சோதனை வெற்றியடைந்தால் விரைவில் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவாக்சின் மூன்றாம்கட்ட சோதனை - 13,000 தன்னார்வலர்கள் சேர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.