ETV Bharat / bharat

பூனைகளுக்காக அறக்கட்டளையைத் தொடங்கிய டெக்கி!

பெங்களூரு: செல்லப் பிராணிகள் வரிசையில் பூனைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அதேபோல் பூனைகளால் எரிச்சலடையும் மக்களும் இங்குள்ளனர். இச்சூழலில் பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர், பூனைகளுக்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, ஆதரவற்ற பூனைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார்.

author img

By

Published : Oct 30, 2020, 12:53 PM IST

techie vijaya set up NGO for orphan cats

பூனைகளின் நிலை என்னவாக இருந்தாலும், நகரத்தில் எந்த மூலைகளில் இருந்தாலும், அவைகளுக்கு உதவ விஜயா எப்போதும் தயாராக இருக்கிறார். ஆதரவற்ற, காயமடைந்த தெரு பூனைகளை கண்டறிந்து அடைக்கலம் அளித்து வருகிறார் விஜயா. ஆறு ஆண்டுகளாக இந்த சேவைவை செய்துவரும் இவர், அடைக்கலம் கொடுக்கப்பட்ட பூனைகளை வளர்க்க விரும்புவோருக்கு, தானமாகவும் அவற்றை வழங்குகிறார்.

அவரது வீட்டில் சுமார் 60 பூனைகள் உள்ளன. பூனைகளின் பாதுகாப்பு, தேவைகளுக்காக ‘பெங்களூரு பூனை அணி’ எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் விஜயா, பிற ஆதரவற்ற விலங்குகளுக்கும் இந்த தொண்டு நிறுவனம் மூலம் உதவிகளை செய்துவருகிறார். பூனைகளை தத்தெடுக்க விரும்புவோருக்காக சிறப்பு முகாம்களை நடத்துகிறார்.

இதுவரையில் 2000 ஆதரவற்ற பூனைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும், அவைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் டெக்கி விஜயா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.