ETV Bharat / bharat

பெங்களூரு போதைப்பொருள் வழக்கு: பினீஷ் கொடியேரிடம் விசாரணை - போதைப்பொருள் கடத்தல்

கொச்சி: பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருடன் தொடர்பு இருப்பதாக கூறி பினீஷ் கொடியேரி அமலாக்க இயக்குநரக அலுவலர்கள் முன் ஆஜரானார்.

பினீஷ்
பினீஷ்
author img

By

Published : Sep 9, 2020, 7:58 PM IST

கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, ஏற்கனவே போக்குவரத்து துறையில் பணிபுரியும் ரவிசங்கர் என்பவரும் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அனூப், கம்மனஹள்ளியில் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹோட்டல் வியாபாரத்தில் பினீஷ் பணத்தை முதலீடு செய்ததாக யூத் லீக் பொதுச் செயலாளர் பி கே ஃபிரோஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து பினீஷை இன்று (செப்டம்பர் 9) நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரக அலுவலகம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், கேரள சிபிஐ-எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி, பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருடன் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கொச்சியில் அமலாக்க இயக்குநரக அலுவலர்கள் முன் ஆஜரானார்.

பினீஷ்

அனூப், அவரது குடும்பத்தினரை தனக்குத் தெரியும் என்றும், சில வருடங்களுக்கு முன்பு பெங்களூருவில் உணவகம் தொடங்குவதற்காக அவரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பணம் வாங்கியதாக பினீஷ் கூறியுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் அனூப் ஈடுபட்டதாகக் கூறப்படும் செய்தியைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் பினீஷ் கூறியிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.