இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தியது. தற்போது வருகிற 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் தகுந்த இடைவெளி, சுய தனிமைப்படுத்தல் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் இங்கு தொடர்கின்றன.
அடுத்தடுத்து வணிக நிறுவனங்கள் திறக்கப்படுவதால், இந்த தொடர்பு மூலம் தொற்று பரவும் அபாயம் உள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் மூலம் பலர் வைரசால் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளது. அத்தகைய வணிகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களையும் தங்கள் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் அதே வேளையில், சேவைகளையும் வழங்குவதற்கு எடுக்கக்கூடிய சில எளிய நடத்தை ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் அறிவித்துள்ளோம்.
கோவிட்-19 குறித்த தெளிவான சமூக செய்தி பரப்புதல்:
அனைத்து கடைகளுக்கும் உள்ளேயும், வெளியேயும் கோவிட்-19 தொற்று அபாயம் மற்றும் அதன் விளைவுகளை தெளிவான செய்தியிடல் மூலம் தெளிவுபடுத்தலாம். கோவிட்-19 பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி சான்றுகள் சமூக மற்றும் நற்பண்பு குறித்த செய்திகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன என்று தெளிடுத்துகின்றன.
இந்தச் செய்தியிடல் அனைவருக்கும் சமூக இடைவெளி பின்பற்றுதல், ஒழுங்கான முறையில் கை கழுவுதல், முகக் கவசம் அணிவது, சுய தனிமைப்படுத்தல் போன்றவற்றை அறிவுறுத்துதல் மற்றும் உதவி எண்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சமூகத்தில் மற்றவர்களைப் பாதுகாக்க எந்தவொரு லேசான அறிகுறிகள் குறித்தும் சுயமாகப் புகாரளிக்க முடியும்.
அணுகலை தவிர்த்தல் மற்றும் திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தல்:
மளிகைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற இடங்களில் மக்கள் காத்திருக்கும் போது தெளிவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இது முடிந்தவரை குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும்.
மளிகைக் கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகளில் வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் நிற்பதற்கும் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும் வசதியாக திறந்த பகுதிகள் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்குள் பரவுவதை தடுக்க முடியும், வாடிக்கையாளர்களுக்கு பரவலை கட்டுப்படுத்த திறந்திருக்கும் நேரங்களை சரிசெய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
கண்களில் படும் இடங்களில் சுத்திகரிப்பான்கள் வைப்பதையும், முகக்கவசம் அணிவதையும் கட்டாயமாக்குதல்:
சூப்பர் மார்க்கெட்டுகளைப் போலவே வணிகங்களும் பொதுவான இடங்களில் கண்களில் படும் இடங்களில் கை சுத்திகரிப்பாளர்களை வைத்திருக்க வேண்டும். ஒழுங்கான சுத்திகரிப்பு மற்றும் கை கழுவுவும் நிலையங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றவர்களுக்கும் தமக்கும் தொற்று ஏற்படாமல் இருக்க முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் வழக்கமான சுத்திகரிப்பு, கை கழுவுதல் மற்றும் முககவசம் அணிவது போன்றவை மட்டுமல்லாமல், நம்பிக்கையின் சார்பு அல்லது பகுத்தறிவு அறியாமை போன்ற நடத்தையில் உள்ள தடைகளையும் தகர்ப்பதோடு, தனி நபர்கள் நோய்தொற்றால் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும்.
பொருள்கள் வாங்கும் இடங்களின் மறுவடிவமைப்பு:
நுழைவுப் பாதை, பொருள்கள் வாங்கும் இடம், கட்டணம் செலுத்தும் இடம் மற்றும் கடையிலிருந்து வெளியேறும் இடம் அனைத்தும் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
கூடுதலாக, ஊழியர்களுக்கு பாதுகாப்பான தூரத்திலிருந்து ஆர்டர்களை வைக்க வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பது மற்றும் பொருள்கள் வாடிக்கையாளர்களால் நேரடியாக அணுக முடியாமல் ஊழியர்கள் அணுகும்படியாக இருப்பது போன்றவை.
வெளியேறும்போது பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றுதல்:
பணம் செலுத்தி வெளியேறும் இடத்தில் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் நிற்பதற்கு அனுமதிப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும். கடைகளால் கட்டணம் வசூலிக்கப்பட்ட பொருள்களை ஷாப்பிங் பைகளில் வைக்கலாம், அவை 'செக்அவுட் தட்டில்' வைக்கப்படுகின்றன. இது ஊழியர்களால் தீண்டப்படாது. இதுபோன்ற செயல்பாடுகள் எந்தவொரு தொற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கும்.
பொருள்களை வெளியிடங்களில்( Online Pick-up spots) மாற்றிக்கொள்வது:
வாடிக்கையாளர்கள் தங்கள் பட்டியல்களை முன்கூட்டியே கடைக்காரர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றால் (எ.கா. வாட்ஸ்அப் மூலம்), கடைக்காரர் பொருள்களை பேக் செய்து வைத்திருக்கலாம். அவற்றை வாடிக்கையாளர்களால் நியமிக்கப்பட்ட இடத்தில் 'பிக்-அப்'செய்துகொள்ளலாம். இது தொடர்பைக் குறைப்பதோடு வசதியாகவும் இருக்கும்.
ஆன்லைன் பணப் பரிவர்த்தணை:
பணப்பரிமாற்றமும் வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக சில அறிக்கைகள் தெரிவித்துள்ளதால் மின் கட்டண முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏற்கனவே பல இடங்களில் இவை நடைமுறையில் உள்ளன. சில கடைக்காரர்களும் பணமாக வாங்க மறுத்துவிட்டனர். க்யூஆர் குறியீடு போன்றவற்றை பயன்படுத்தி கண்மட்டத்திலேயே பணப்பறிமாற்றம் செய்வது தொடர்பை குறைக்கும்.
மேற்கூறியவை அத்தியாவசிய சேவைகளுக்கு தங்களையும் தங்கள் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க உதவும் சில நடவடிக்கைகள் மட்டுமே, மேலும் கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க உதவும் வேறுசில நடவடிக்கைகளையும் செயல்படு;த்தலாம். நியமிக்கப்பட்ட நிற்கும் இடங்களுக்கு வட்டங்களை வரைதல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மேம்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை ஏற்கனவே பல கடைக்காரர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இருப்பினும், ஏராளமான தவறான தகவல்களும் பரவி வருவதால், பல சிறு வணிகங்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கைகள் கடைக்காரர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது மட்டுமல்லாமல்,கோவிட்-19 'உண்மையான' அபாயத்தையும் வெளிப்படுத்தும்.
இவை அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆதித்யா லாமாஸ், சாக்ஷாம் சிங் நடத்திய நடத்தை அறிவியல் தொடர்பான ஆய்வில் தெரியவந்துள்ளது.