முல்லயங்கிரி சிகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 1930 மீட்டர் உயரத்தில் இச்சிகரம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையான பாபா புடான் கிரி மலைத்தொடரில் முல்லயங்கிரி சிகரம் உள்ளது. இங்கு எப்போதும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதாலும், ஆண்டின் முக்கால்வாசி நாட்கள் மழை பெய்வதாலும் சுற்றுலா பயணிகளின் முதல் தேர்வாக இந்த சிகரம் இருக்கும்.
தற்போது முல்லயங்கிரி சிகரத்தில், மேகம் உரசிக் கொண்டிருக்கும் ரம்மியமான காட்சி நிலவுகிறது. இந்த காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரசித்துவருகின்றனர்.