புதுச்சேரியில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நெகிழிப் பொருட்கள் மற்றும் பைகளுக்கு தடை விதிப்பதாக புதுச்சேரி அரசு அறிவித்தது. மேலும், தடையை மீறி நெகிழிப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநர் மலர் கண்ணன் தலைமையில் குழு ஒன்று புதுச்சேரி நேரு வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, தடையை மீறி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகளைப் புதுச்சேரி நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், நெகிழிப் பைகளை விற்பனை செய்த வியாபாரிகளை அலுவலர்கள் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.