கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் கன மழை பெய்துவருகிறது. இதனால், குழந்தைகள், பெண்கள், பணிபுரிவோர் என அனைத்துத் தரப்பினரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெல்காம் மாவட்டத்திலுள்ள பஞ்சகங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், அங்க்ரோளி, லிங்கனமாதா, சஞ்சவாடா, தேவலதி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலை தண்ணீரில் மூழ்கியதால் அந்த சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
நிலைமை மோசமடைந்ததையடுத்து, வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளை பெல்காம் மாவட்ட வட்டாட்சியர் பார்வையிட்டு நிவாரண பணிகள் வழங்க உத்தரவிட்டார்.
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.