ETV Bharat / bharat

'பால் தாக்கரே கனவு நிறைவேறியது' - சுவரொட்டிகளில் பட்டையைக் கிளப்பும் சிவசேனாவினர்!

author img

By

Published : Nov 28, 2019, 12:39 PM IST

மும்பை: சிவசேனா கட்சியின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான பால் தாக்கரேவின் கனவு நனவாகி விட்டது என்று சிவசேனா உறுப்பினர்கள் மும்பை வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

sivasena poster
சிவசேனா

மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்த தொடர் பல்வேறு அரசியல் பிரச்னைகளுக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் முதலமைச்சர் பதவிக்கு வருவதால், அக்கட்சியினர் பெரும் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் உள்ள சிவசேனாவின் தலைமை அலுவலகத்தின் அருகில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே புகைப்படங்களுடன், சிவசேனா நிறுவனரான பால் தாக்கரே - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து ஒருவருக்கொருவர் வணக்கம் கூறும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தன.

மேலும்,'பால் தாக்கரேவின் கனவு நனவாகிவிட்டது' என்ற வாசகங்களும் அதில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஒரு மாதமாக கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த ராகுல் காந்தி - விரைவில் ஜார்க்கண்டில் பரப்புரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.