சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலங்கள், அலுவலர்களின் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னணி துறைகளைச் சார்ந்த அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், 'காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த அரசின் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது' எனக் குற்றம்சாட்டினார். எங்கள் அரசு, வருவமானவரித் துறை ஊழியர்கள் தங்களது பணியை மேற்கொள்ள தடையாக இருந்ததில்லை எனத் தெரிவித்த பகேல், முறையற்று நடந்துகொள்ளும் அலுவலர்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றார்.
இதையும் படிங்க: 'இன்பினிட்டி பார்க்' - மாற்றுத்திறனாளி சிறுவர்களின் உலகம்!